News March 26, 2026
ராமநாதபுரம் அருகே கத்திக் குத்து

ராமநாதபுரம் அருகே தெற்குதருவை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார்(35). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மாரிசெல்வம்(42) என்பவருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பிரவீன்குமாருடன் தகராறில் ஈடுபட்ட மாரிசெல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரவீன்குமாரை குத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் மாரிசெல்வத்தை கைது செய்தனர்.
Similar News
News April 7, 2026
இராம்நாடு: ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்.? அதிர்ச்சி..

ராமநாதபுரம், திருப்பாலைக்குடியைச் சேர்ந்த பிரபு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், எங்கள் வீட்டின் அருகில் இருந்த முஸ்லீம் ஜமாத்துக்கு சொந்தமான இடத்தை கிராம நிர்வாகிகள் சிலர் ஆக்கிரமித்தனர். இது ஜமாத்துக்கு சொந்தமான இடம் தான் என தாங்கள் தெரிவித்ததால், எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர் என கூறியிருந்தார். விரிவான விசாரணைக்காக ஏப்.9 க்கு வழக்கு ஒத்திவைப்பு.

இராம்நாடு: நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து.!

தொண்டி மகாசக்திபுரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சக்தி பாண்டி (37), உத்தமராஜன் (19). இவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில், திடீரென கடலில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் மீனவர்கள் சக்தி பாண்டி, உத்தம ராஜன் சென்ற படகு காற்றின் வேகத்தில் கவிழ்ந்தது. நடுக்கடலில் தத்தளித்த 2 மீனவர்களையும் அந்த வழியாக மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பார்த்து தங்கள் படகில் ஏற்றி கரைக்கு அழைத்து வந்தனர்.