News November 25, 2025
ராமநாதபுரம் அருகே கடல் அலை சுழலில் சிக்கியவர் மாயம்

நம்புதாளையை சேர்ந்தவர் முத்துராக்கு 50. மீனவரான இவருக்கு சொந்தமான நாட்டு பைபர் படகை பாதுகாக்கும் வகையில் நங்கூரம் இட்டு நிறுத்துவதற்காக அதே கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் 30, ஆகாஷ் 20, தொண்டீஸ்வரன் 18, ஆகிய மூவரும் கடலுக்குள் சென்றனர். அப்போது சிக்கியதால் தொண்டீஸ்வரனை அலை சுழல் இழுத்துச் சென்றது. போலீசார் உள்ளிட்ட பலரும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
Similar News
News April 10, 2026
இராமநாதபுரம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் சார்பில் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 66 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன்படி முதுகுளத்தூர் தொகுதியில் 20 பேரும், இராமநாதபுரம் தொகுதியில் 13 பேரும், திருவாடானை தொகுதியில் 21 பேரும், பரமக்குடி (தனி) தொகுதியில் 12 பேரும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
News April 10, 2026
பரமக்குடி அருகே தீயில் கருகி 32 உயிர்கள் பலி.!

பரமக்குடி அருகே புதுக்குடியை சேர்ந்த விவசாயி வெள்ளைச்சாமி, அவரது வயலில் நெல் அறுவடை முடிந்ததால் வயலுக்கு தீ வைத்தார். அருகே இருந்த, அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் வயலில் தீ மெல்ல மெல்ல பரவியது. அங்கு 32 செம்மறி ஆடுகள் கிடையில் அடைக்கப்பட்டிருந்தன. பரவிய தீயால் 32 செம்மறி ஆடுகள் உடல் கருகி பரிதாபமாக பலியாகின. முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் பரமக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.