News December 30, 2025

ராமநாதபுரம் அருகே உடல் நசுங்கி பெண் பலி

image

கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வழிவிட்டான் என்பவரின் மனைவி பொன்னுத்தாய். இவர் அருப்புக்கோட்டை காந்தி நகர், பிள்ளையார் கோயில் அருகில் இன்று அதிகாலையில் நடந்த சாலை விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Similar News

News January 1, 2026

ராமநாதசுவாமி கோவிலில் திருட்டு.!

image

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கோவிலின் தூய்மை பணியாளர் பணி செய்யும் மணிகண்டன் என்பவர் உண்டியல் பணம் ரூ.1 லட்சத்தை திருடி உள்ளார். இதனை கோவில் அதிகாரிகள் சிசிடிவி கேமரா மூலம் கண்டறிந்து காவல்நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 1, 2026

மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர்ப்பு சிறப்பு முகாம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (டிச.31) மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஸ் தகவல் தெரிவித்தார்.

News December 31, 2025

ராம்நாடு: குடிநீர் பிரச்சனை தீர ஓரே வழி இதுதான்.!

image

ராம்நாடு மக்களே உங்க பகுதியில் குடிநீர் சரிவர வரவில்லை, கலங்கலாக வருகிறது, குப்பை குவியல் போன்ற அடிப்படை பிரச்சனைகள் உள்ளதா? அதிகாரிகளிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லையா? ராமநாதபுரம் மாவட்ட இலவச கட்டுப்பாட்டு எண்ணிற்கு (1800 425 7040) புகார் தெரிவிக்கலாம். உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இந்த பயனுள்ள தகவலை உங்க பகுதி மக்களுக்கு உடனே SHARE பண்ணி உதவுங்க.

error: Content is protected !!