News April 8, 2025
ராமநாதபுரம் அங்கன்வாடியில் வேலை ரெடி

ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 84 பணியாளர், 3 குறு அங்கன்வாடி பணியாளர், 38 உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்.
Similar News
News April 23, 2025
மிளகாய்க்கான மதிப்பு சங்கிலி பங்குதாரர் ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரத்தில் மிளகாய்க்கான மதிப்பு சங்கிலி பங்குதாரர் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. வேளாண் வணிக இணை இயக்குநர் அமுதன் தலைமை வகித்தார். வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழக முதுநிலை மேலாளர்கள் பாண்டித்துரை, கவிமுகில், வேளாண் இணை, துணை இயக்குநர்கள் பாஸ்கரமணியன், கோபாலகிருஷ்ணன், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகதீசன், வள்ளல் கண்ணன் உட்பட பலர் ஆலோசனை வழங்கினர்.
News April 23, 2025
கேரளாவில் நடைபெற்ற கூட்டத்தில் இராமநாதபுரம் எம்பி

வெளியுறவுத்துறை நாடாளுமன்ற நிலைக்குழு சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக கேரளா மாநிலத்தில் நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது கொச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் RPO மற்றும் பாஸ்போர்ட் சேவை மையம் PSK உள்ளிட்டவைகளை நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பார்வையிட்டனர். இதில், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் நவாஸ்கனி கலந்து கொண்டார்.
News April 23, 2025
இராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் முகாம்

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று (ஏப்.23) நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.