News April 12, 2025
ராமநாதபுரத்தில் 187 சமையல் உதவியாளர் பணி

ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 187 சமையல் உதவியாளர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. தேர்வான ஓராண்டுக்கு தொகுப்பூதியமும், அதன் பின்பு சிறப்பு காலமுறை ஊதியமும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்ற 18- 40 வயதுள்ளவர்கள் வரும் ஏப். 29க்குள் சம்பந்தப்பட்ட ஒன்றியம், நகராட்சி, அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.*SHARE பண்ணவும்
Similar News
News October 21, 2025
ராம்நாடு: மழை பாதிப்பு புகார் எண் வெளியீடு.!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் உட்பட சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இராமநாதபுரம் மவாட்டத்திற்கென பிரத்தியகமாக உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 21, 2025
BREAKING: ராமநாதபுரத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது. என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம்,விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்.
News October 21, 2025
ராமநாதபுரம்: லஞ்சம் கேட்டால் இதை செய்யுங்க!

ராமநாதபுரம் மக்களே, நீங்கள் சாதி சான்று, குடியிருப்பு சான்று, பட்டா, சிட்டா மாற்றம், வரி செலுத்துதல் போன்ற ஏதேனும் ஒரு பணிக்காக தாசில்தார் அலுவலகம் செல்லும் போது, அங்கு பணிகளை செய்து தர சிலர் லஞ்சம் கேட்க வாய்ப்புண்டு. அவ்வாறு யாரேனும் லஞ்சம் கேட்கும் பட்சத்தில், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் 0461-2271143 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!