News April 9, 2025
ராமநாதபுரத்தில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வணிக நிர்வாகி பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒர் பட்டபடிப்பு படித்த 20 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும்<
Similar News
News April 17, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஏப்ரல். 17) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News April 17, 2025
விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு

ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெறக்கூடிய கோடைகால பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே.15 வரை சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. தடகளம், கூடைப்பந்து, கால்பந்து,ஹாக்கி கையுந்து பந்து, டென்னிஸ், இறகுப் பந்து ஆகிய விளையாட்டுகளில் மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி முகாமில் பயிற்சி அளிக்கப்படும்.முகாமில் கலந்து கொள்பவர்கள் மைதானத்திற்கு நேரில் வரலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார்.
News April 17, 2025
இராமேஸ்வரம் கோவிலில் தரிசன கட்டணம் ரத்து

இராமேஸ்வரம், திருச்செந்தூர், திருவரங்கம் உள்ளிட்ட பத்து திருக்கோவில்களில் முக்கிய திருவிழா நாட்களில் பக்தர்களுக்கு தரிசன கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும் எனவும், அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.51.50 கோடி மதிப்பீட்டில் சமயபுரம், இராமேஸ்வரம், திருவரங்கம், வேளச்சேரி உள்ளிட்ட 4 கோவில்களில் அர்ச்சகர் (ம) பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டி தரப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.