News August 26, 2024
ராமநாதபுரத்தில் மாபெரும் கபடி போட்டி

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கொட்டகை கிராமத்தில் மாபெரும் கபடி போட்டி நேற்று(ஆக.,25) நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வீரர்கள் பங்குபெற்றனர். 2 நாளாக நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற அணியினருக்கு விளையாட்டு குழு சார்பாக ரூ.15,000 பரிசு தொகை மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. இதில் சிறந்த ஆட்டநாயகன் விருதை, களரியை சேர்ந்த மணிமாறனுக்கு வழங்கப்பட்டது.
Similar News
News March 3, 2026
இராம்நாடு: தேர்தலை புறக்கணிப்போம் – எந்த ஊர்? ஏன்?

மண்டபம், வாலந்தரவை ஊராட்சிக்குட்பட்ட வழுதூர் அருளொளி நகர் பகுதியில் 30 ஆண்டுகள் பழமையான சிமெண்ட் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர். ராமேஸ்வரம் நேஷனல் ஹைவே இணைப்பு, குடிநீர் வசதி உள்ளிட்ட கோரிக்கைகளும் நிலுவையில் உள்ளன. சாலை சீரமைக்கப்படாவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
News March 3, 2026
இராமநாதபுரம் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.02) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News March 2, 2026
ராம்நாடு : இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

இராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்கே <


