News May 10, 2024
ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2025
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <
News April 20, 2025
நீங்கள் சாப்பிடும் மாம்பழம் இயற்கையானதா & செயற்கையானதா?

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *ஷேர் பண்ணுங்க
News April 20, 2025
தலைமன்னார் தனுஷ்கோடி வரை நீந்தி கடந்த மாற்றுத்திறனாளி பெண்

இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை மாற்றுத்திறனாளி பெண் உட்பட 10 நீந்தி கடந்து வந்தனர். மும்பையை சேர்ந்த ஷஸ்ருதி மற்றும் பாலா கணேஷ் இருவரும் மாற்றுத்திறனாளிகள் நேற்று முன்தினம் காலை தலைமன்னார் கடலில் குதித்து நீந்த துவங்கினர். அவர்களுடன் 8 வீரர்களும் நீந்த துவங்கினர். இதில் மாற்றுத்திறனாளி ஷஸ்ருதி 11 மணிநேரமும், பாலா கணேஷ் 10:30 மணிநேரமும் நீந்தி தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தனர்.