News December 30, 2024

ராமநாதபுரத்தில் புதுமைப்பெண் திட்டம் தொடக்கம் 

image

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற அரசு உதவி பெறும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை இன்று தூத்துக்குடியில் முதல்வர் தொடங்கிவைத்தார். அதைதொடர்ந்து இராமநாதபுரத்தில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

Similar News

News March 7, 2026

இராமநாதபுரம் மாவட்ட தாசில்தார் எண்கள்

image

▶️கடலாடி – 04576-266558

▶️கமுதி – 04576-223235

▶️முதுகுளத்தூர் – 04576-222223

▶️பரமக்குடி – 04564-226223

▶️இராஜசிங்கமங்கலம் – 04561-299699

▶️திருவாடானை – 04561-254221

▶️கீழக்கரை – 04567-241255

▶️இராமேஸ்வரம் – 04573-221252

▶️இராமநாதபுரம் – 04567-220352

இவை இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அலுவலக நேரத்தில் மட்டும் தேவைக்கு அழைக்கவும்.

News March 7, 2026

இராம்நாடு: புதிய அதிமுக பெண் மாநில நிர்வாகிக்கு வாழ்த்து

image

அதிமுக மாநில மகளிரணி இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள லீமா ரோஸ் மார்ட்டினை அதிமுக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மாநில அம்மா பேரவை இணை செயலாளர் சதன் பிரபாகர், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில இணைச்செயலாளர் நாகேந்திர சேதுபதி, பரமக்குடி நகர் செயலாளர் வின்சென்ட் ராஜா ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

News March 7, 2026

இராம்நாடு: கர்ப்பிணி & கணவருக்கு நேர்ந்த கொடுமை

image

திருவாடனை அருகே மங்கலக்குடி பேராமங்கலம் பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலில் கொத்தடிமைகளாக இருந்த தஞ்சாவூரை சேர்ந்த 5 மாத கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் மீட்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடத்திய விசாரணையில், ரூ.1 லட்சம் முன்பணம் பெற்று 8 மாதங்களாக குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய வைத்ததும், ஊருக்கு செல்ல அனுமதிக்காததும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் தம்பதியை மீட்டனர்.

error: Content is protected !!