News March 27, 2025
ராமநாதபுரத்தில் நீச்சல் பயிற்சி வகுப்புகள்

ராமநாதபுரம் ஆட்சியர் வளாகத்தில் உள்ளநீச்சல்குளத்தில் நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு நீச்சல் பழக 12 நாட்கள் பயிற்சி வகுப்புகள் இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளது. முதல் தொகுப்பு ஏப்.01 – ஏப்.13, இரண்டாம் தொகுப்பு ஏப்.15 – ஏப்.27, முன்றாம் தொகுப்பு ஏப்.29 – மே11, நான்காம் தொகுப்பு மே.13 – மே.25, ஐந்தாம் தொகுப்பு மே.27 – ஜூன்.8 வரை வகுப்புகள் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 99766 91417 தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News March 31, 2025
நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

தேனியைச் சேர்ந்த ஆசிக் அகமது(38) என்பவர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வந்தார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இவர் தனது அக்கா குடும்பத்துடன் அரியமான் கடற்கடைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மீண்டும் மதுரைக்கு காரில் திரும்பிய போது நென்மேனி சாலையில் மற்றொரு கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஆசிக் அகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
News March 31, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (மார்ச்.30) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News March 30, 2025
ரம்ஜான் பண்டிகைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் இன்றுடன் (மார்ச்.30) நிறைவு அடைகிறது. அதனை எடுத்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்கான பிறை இன்று (மார்ச்.30) பார்க்கப்பட்டது. மேகம் தெளிவாக இருந்ததால் முதல் பிறை தெரிந்ததை அடுத்து நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராமநாதபுரம் மாவட்ட அரசு ஹாஜி வெளியிட்டுள்ளார். எனவே நாளை (மார்ச்.31) இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட உள்ளனர்.