News December 14, 2024

ராமநாதபுரத்தில் நாளை செஸ் போட்டி 

image

ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் 25வது மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டு போட்டி தேவி பட்டினம் ரோடு செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நாளை (டிச.15) காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. திரைப்பட நடிகர் அருண்மொழி தேவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார். இத்தகவலை ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் செயலர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 2, 2026

ராம்நாடு : மாதம் ₹1,000 செலுத்தினால்.. ரூ.5.54 லட்சம்

image

பெண் குழந்தைகளின் எதிர்கால நிதித் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன்  செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது . குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை இத்திட்டத்தின் கீழ் கணக்கை திறக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.1,000 முதலீடு செய்து வந்தால் 21 ஆண்டுகள் முடிவில் வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு ரூ. 5,54,206 கிடைக்கும். தொடர்புக்கு வங்கிகள் (அ ) தபால் நிலையத்தை அணுகவும்

News April 2, 2026

ராம்நாடு: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்

image

தமிழக அரசால் TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, அழகு நிலையம், லாண்டரி சேவை உள்ளிட்ட தொழில்கள் இதில் அடங்கும். இதற்கு கல்வி தகுதி, சொத்துப் பத்திரம் தேவையில்லை . 18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள்  இங்கு<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

News April 2, 2026

ராம்நாடு : இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். SHARE IT

error: Content is protected !!