News June 4, 2024
ராமநாதபுரத்தில் நவாஸ் கனி வெற்றி

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளராக நவாஸ்கனி ஏணி சின்னத்தில் போட்டியிட்டார். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மொத்தம் 491052 வாக்குகள் பெற்று 161463 வாக்குகள் வித்தியாசத்தில் நவாஸ் கனி வெற்றி பெற்றார் . ஓபிஎஸ் 329589, ஜெயபெருமாள் அதிமுக 96182, சந்திரகலா ஜெயபால் நாதக 93506 வாக்குகள் பெற்றுள்ளனர்.
Similar News
News August 22, 2025
ராம்நாடு: ஆக.27ல் 3 ரயில்கள் ரத்து!

ராமநாதபுரம் – சத்திரக்குடி இடையே ஆக.27ல் ரயில்வே பொறியியல் பிரிவு சார்பில் பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று ராமேஸ்வரம் – மதுரை பாசஞ்சர் ரயில் (வ.எண் : 56714), திருச்சி – ராமேஸ்வரம் திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்கள்:16849/16850), மானாமதுரை – ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை உங்கள் நண்பர்கள்&உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
News August 22, 2025
ராம்நாட்டில் சிதைந்து கிடந்த ஆண் உடலால் பரபரப்பு!

ராமநாதபுரம்: சக்கரைகோட்டை ரயில்வே கேட் பகுதியில் நேற்று(ஆக.21) காலையில் ரயிலில் அடிபட்டு 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் முழுவதுமாக நசுங்கி, துண்டு துண்டாக முகம் சிதைந்து முற்றிலும் அடையாளம் காண முடியாத நிலையில் கிடந்தது. இறந்து கிடந்த நபர் யார்?, இது தற்கொலையா (அ) தவறி விழுந்தாரா? என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் மற்றும் கேணிக்கரை போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
News August 21, 2025
சக்கரகோட்டை அருகே ரயிலில் அடிபட்டி ஒருவர் உயிரிழப்பு

இன்று காலை சுமார் 7 மணிக்கு முன்பாக உச்சப்புளி ரயில் நிலையத்திற்கும் ராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கும் இடையே சர்க்கரை கோட்டை ரயில்வே கேட்டு அருகே மஞ்சன மாரியம்மன் கோவில் தெருவில் அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற ரயில் ராமேஸ்வரம் மதுரை பயணிகள் ரயில் வண்டியில் அடிபட்டு பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.