News January 8, 2026

ராமநாதபுரத்தில் ஜன.25- முதல் துவக்கம்

image

இராமநாதபுரம் ராஜா பள்ளி மைதானத்தில் வருகிற ஜன.25 அன்று தொடங்கி பிப்.04 வரை பத்து நாட்கள் 8-ஆம் ஆண்டு புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதில் அறிவியல் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. புத்தக திருவிழா நடைபெறும் பத்து நாட்களுக்கு விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், அறிஞர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், பட்டிமன்றம் ஆகியவை நடைபெற உள்ளன.

Similar News

News January 22, 2026

இராமநாதபுரத்தில் வீட்டு வயரிங் குறித்த இலவச பயிற்சி

image

இராமநாதபுரம் சிகில் ராஜ வீதி பகுதியில் உள்ள சாந்த் பீவி காம்ப்ளெக்ஸ்-ல் வீட்டு வயரிங் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. வருகின்ற ஜன.23ம் தேதி முன்பதிவு E- சேவை மையம் பட்டினம்காத்தான் D – பிளாக் பஸ் ஸ்டாப் அருகில் நடைபெறுகிறது. 30 நாட்கள் பயற்சி நடைபெறும். மேலும் தகவலுக்கு 8825954443, 8056771986 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News January 22, 2026

ராமநாதபுரத்தில் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி

image

ராமநாதபுரம் சிகில் ராஜதெரு சாந்த் பீவி காம்ப்ளக்ஸ் பகுதியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி வருகின்ற ஜன.27ம் தேதி காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படுத்தப்பட உள்ளன. இதில் 19 – 50 வயது உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். *SHARE செய்து பிறருக்கு உதவுங்கள்

News January 22, 2026

ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் பரபரப்பு தகவல்!

image

ராமேஸ்வரம் தை அமாவாசை பூஜையில் கிளி ஜோதிடர் உட்பட 20 பேரை வைத்து தர்ப்பண மோசடி நடந்ததாக கோயில் நிர்வாகம் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது. தவறுதலாக மந்திரம் ஓதிய நபர், அரசு அர்ச்சகர் பயிற்சி பெற்றவர் அல்ல, அவர் பழனியில் கிளி ஜோதிடம் பார்த்தவர். ஓர் சங்கத்தினர் மூலமே இவர்கள் 20 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் கோவில் நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை என இணை ஆணையர் விளக்கம்.

error: Content is protected !!