News August 10, 2024
ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென் தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது. அதன்படி நாளை(ஆக.11) ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும். SHARE IT
Similar News
News November 9, 2025
ராம்நாடு: அரசு பள்ளி மாணவி தேசிய ஹாக்கி போட்டிக்கு தேர்வு

இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை திருவள்ளுவர் நகரை சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி விஜய மாலினி அடுத்த மாதம் டிசம்பரில் மத்தியப்பிரதேசம் மாநிலம் குணாவில் நடக்கவுள்ள தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க உள்ளார். தேசிய ஹாக்கி போட்டிக்கு தேர்வாகி உள்ள மாணவி விஜய மாலினியை பள்ளி தலைமையாசிரியர் வேணி ரத்தினம் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
News November 9, 2025
ராம்நாடு: EB பில் அதிகம் வருகிறதா? இத பண்ணுங்க!

ராம்நாடு மக்களே, கொஞ்சமா கரண்ட் யூஸ் பண்ணாலும், அதிகமா பில் வருதா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <
News November 9, 2025
ராம்நாடு: 200 மீட்டர் உள்வாங்கிய கடல்

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்ன பாலம் கடற்கரையில் நேற்று நவ.08 அப்பகுதியில் சுமார் 200 மீட்டர் கடல் உள்வாங்கியதால் நாட்டு படகுகள் தரை தட்டி நின்றன. இதையடுத்து மீனவர்கள் நாட்டு படகுகளை மீட்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். சிறிது நேரம் கழித்து கடல் நீர் வழக்கமான அளவுக்கு உயர்ந்ததும் இயல்பு நிலைக்கு திரும்பியது.


