News October 20, 2025

ராமநாதபுரத்தில் உச்சத்தை தொட்ட மல்லிகை பூ

image

இராமநாதபுரம் மாவட்ட பூக்கடை வியாபாரிகள் வெளி மாவட்டத்தில் இருந்து, பூக்களை மொத்தமாக வாங்கி வந்து, விற்பனை செய்து வருகின்றனர். இன்று (அக். 20) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2500, முல்லை பூ ரூ.1800, பிச்சிப்பூ ரூ.1200, கனகாம்பரம் ரூ.1800, அரளி ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.170, சம்மங்கி பூ ரூ.70க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Similar News

News October 20, 2025

ராமநாதபுரம்: மழை வெள்ளம் பாதிப்புகள்.. புகார் எண்கள்!

image

ராமநாதபுரம் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News October 19, 2025

ராம்நாடு: தீபாவளியன்று மஞ்சள் அலர்ட்.!

image

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குறிப்பாக ராமநாதபுரத்தில் நாளை (அக் 20) தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 19, 2025

ராமநாதபுரம் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

ராமநாதபுரம் மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

error: Content is protected !!