News November 6, 2024
ராமநாதபுரத்தில் இன்று ரோந்து பணியில் போலீஸ் விவரம்!

இன்று(05.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. DSP சபரிநாதன் தலைமையில் இன்று ரோந்து பணி நடைபெறும். வேறு எதாவது தகவல் தேவைப்பட்டால் எண் 100-ஐ டயல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 24, 2025
விடைபெற தயாராகும் பாம்பன் பாலம்

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் அமைந்துள்ள தூக்கு பாலம் 110 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்ற ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாலம் பல்வேறு புயல்களை எதிர்கொண்டு தனது வலிமையும், பொறியியல் திறனையும் வெளிப்படுத்தியுள்ளது. தற்போது பாம்பன் பாலம் விடைபெற தயாராகியது.
News August 24, 2025
கல்வி உதவித்தொகை பெற அஞ்சல் துறை அழைப்பு

ராமநாதபுரம் இந்திய அஞ்சல் துறையில் தபால் தலை சேகரிப்பு வினாடி- வினா போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.6000 வழங்கப்படுகிறது.இந்திய அஞ்சல் துறை சார்பில் தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க 6 முதல் 9 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கும் ‘தீன் தயாள் ஸ்பார்ஷ்’ திட்டம் செயல்படுகிறது.
News August 24, 2025
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

(23.08.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். திருவாடானை கீழக்கரை பரமக்குடி ராமநாதபுரம் ராமேஸ்வரம் முதுகுளத்தூர் கமுதி உள்ளிட்ட பகுதிகளில் அவசர தொடர்புக்கு மேற்கண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது