News March 21, 2024
ராமநாதபுரத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

அடுத்த மூன்று மணி நேரத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்தத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதனால் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் அதற்கான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் கொளுத்திவரும் நிலையில் இந்த மழை குளுமையான சூழலை ஏற்படுத்தும்.
Similar News
News February 17, 2026
இராமநாதபுரம்: கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5000

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (2 தவணைகள்)
2. 2வது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற, இங்கு <
News February 17, 2026
ராமநாதபுரம்: மின்சாரம் தாக்கி பலி

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே காத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனி தனக்கு சொந்தமான வயல்வெளிகளில் மிளகாய், பருத்தி பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாய நிலங்களில் காட்டு பன்றிகள் அட்டூழியம் செய்வதாக கூறி தோட்டத்திற்கு கொடுக்கப்பட்ட மின்வேலியை கடக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
News February 17, 2026
இராமநாதபுரம்: கனமழைக்கு எச்சரிக்கை!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவிவரும் சூழலில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகையில் 21ஆம் தேதி கனமழை பெய்ய கூடும். அடுத்த நாள் 22ம் தேதி தென்காசி, குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. *ஷேர் பண்ணுங்க


