News September 15, 2025
ராமநாதபுரத்தில் இங்கெல்லாம் மின்தடை

நகரிகாத்தான் துணை மின் நிலையத்தில் நாளை (செப்16) பராமரிப்பு பணி மேற்கொள்வதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை திருவாடானை, சி.கே மங்கலம், பாண்டுகுடி, நகரிகாத்தான், வெள்ளையாபுரம், மங்களகுடி, அஞ்சுக்கோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனூர், எட்டுக்குடி, மல்லனூர், ஓரியூர், அரசூர், டி.நாகனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ளவர்களுக்கு SHRE செய்ங்க.
Similar News
News September 15, 2025
முதுகுளத்துார்: மின்சாரம் பாய்ந்து 17வயது மாணவர் பரிதாப பலி

முதுகுளத்துார் பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் மகன் ஹரிகார்த்திகேயன் 17, பிளஸ் 2 படித்தார். வெங்கலக்குறிச்சி கிராமத்தில் முருகன் கோயில் அருகே புதிதாக வீடு கட்டி வருகின்றனர்.வீட்டிற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக மின்மோட்டார் பயன்படுத்தினர். அப்போது சுவிட்சை அணைக்காமல் மின் மோட்டாரை ஹரிகார்த்திகேயன் தொட்ட போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 15, 2025
ராமநாதபுரம்: டிகிரி முடித்தால் ரூ.35,000 சம்பளத்தில் வேலை

ராமநாதபுரம் மக்களே தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்குஅறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் <
News September 14, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.14) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.