News January 9, 2026

ராமநாதபுரத்திற்கு கனமழை எச்சரிக்கை.. மஞ்சள் அலர்ட்

image

வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (ஜன.9) கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News January 30, 2026

இராம்நாடு: SBI வங்கி வேலை; ரூ.48,480 மாத சம்பளம்!

image

இராம்நாடு மக்களே; SBI வங்கியில் 2050 Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த தகுதி வாய்ந்த 21 முதல் 30 வயதுடையவர்களுக்கு மாத சம்பளம் ரூ.48,480 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பக்க கடைசி தேதி 18.02.2026. தகுதியானவர்கள்<> CLICK <<>> செய்து விண்ணப்பிக்கலாம். *வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க!

News January 30, 2026

இராம்நாடு: விடுமுறை அறிவித்த கலெக்டர்

image

வருகின்ற பிப்.1ம் தேதி வடலூர் இராமலிங்க அடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு அன்று ஒரு நாள் மட்டும் இராமநாதபுரத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபான கடைகளும், அனைத்து எப்.எல்., 2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபான கடைகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் காலோன் தெரிவித்துள்ளார். இதனை மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தி தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 30, 2026

இராம்நாடு: சூறாவளிக்காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

பிப்ரவரி 1 – 4 வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கையாக, தமிழக கடலோரப் பகுதிகளில் மன்னார் வளைகுடா பகுதிகளான இராமநாதபுரம் மற்றும் குமரிக்கடலில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (ஜனவரி 30, 31) மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!