News January 1, 2026

ராமநாதசுவாமி கோவிலில் திருட்டு.!

image

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கோவிலின் தூய்மை பணியாளர் பணி செய்யும் மணிகண்டன் என்பவர் உண்டியல் பணம் ரூ.1 லட்சத்தை திருடி உள்ளார். இதனை கோவில் அதிகாரிகள் சிசிடிவி கேமரா மூலம் கண்டறிந்து காவல்நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News January 8, 2026

ராம்நாடு மக்களே வரும் காலத்தில் இது ரொம்ப அவசியம்.!

image

ராம்நாடு மக்களே, விரைவில் வெயில் காலம் வரப்போகிறது. அந்த சமயத்தில் வீட்டில் கரண்ட் இல்லை என்றால் நமது வீடே சமையலறை போன்று இருக்கும். அந்த சமயம் யாரை தொடர்பு கொள்வது என தெரியவில்லையா.? வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். அவசர காலத்தில் 9498794987 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.

News January 8, 2026

ராமநாதபுரத்தில் ஜன.25- முதல் துவக்கம்

image

இராமநாதபுரம் ராஜா பள்ளி மைதானத்தில் வருகிற ஜன.25 அன்று தொடங்கி பிப்.04 வரை பத்து நாட்கள் 8-ஆம் ஆண்டு புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதில் அறிவியல் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. புத்தக திருவிழா நடைபெறும் பத்து நாட்களுக்கு விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், அறிஞர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், பட்டிமன்றம் ஆகியவை நடைபெற உள்ளன.

News January 8, 2026

ராமநாதபுரத்திற்கு கனமழை… மஞ்சள் எச்சரிக்கை.!

image

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை (ஜன.09) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!