News March 9, 2026

ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்யுங்க: அன்புமணி மனு

image

பாமகவின் பெயர், கொடி, சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, உரிமையியல் நீதிமன்றத்தில் அன்புமணி மனு தாக்கல் செய்துள்ளார். வயது, மருத்துவ காரணங்களால் ராமதாஸ் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை; இதனை பயன்படுத்தி சிலர் அவரை தவறாக வழிநடத்துகிறார்கள், பாமகவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 4, 2026

தங்கம் வாங்க சரியான நேரமா? வியாபாரிகள் சொல்வதென்ன?

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கிட்டத்தட்ட பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. ஒரு வாரமாக 1 அவுன்ஸ்(28g) $4,700 என்ற சராசரியில் உள்ளது. மேலும் சில வாரங்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என தெரிவித்துள்ள வியாபாரிகள் இது தங்கம் வாங்குவதற்கான தருணம் என்றும் கூறுகின்றனர். சர்வதேச சந்தையில் தற்போது 1 அவுன்ஸ் $23 உயர்ந்து $4,676 ஆக உள்ளது. இதேநிலை நீடித்தால் நம்மூர் சந்தையில் சற்று விலை உயர வாய்ப்புள்ளது.

News April 4, 2026

விஜய் பிரசாரம்.. முக்கிய அப்டேட் வெளியானது

image

புதுச்சேரியில் இன்று தவெக வேட்பாளர்களை ஆதரித்து 3 இடங்களில் விஜய் பிரசாரம் செய்கிறார். இந்நிலையில், பிரசாரத்தில் பங்கேற்க 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இதில் கர்ப்பிணிகள், சிறுவர்கள், மாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் வரவேண்டாம் என்றும், விஜய்யின் பிரசார வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News April 4, 2026

BREAKING: அதிமுகவில் இருந்து விலகுகிறாரா.. அறிவிப்பு

image

அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த தனபால், தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக சில நாள்களாக தகவல் பரவியது. இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னை பொறுத்தவரை ஆதியும், அந்தமும் அதிமுகதான் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் சீட் கிடைக்காததால் எனக்கு வருத்தம் ஏதுமில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!