News July 29, 2024

ராணுவ வீரர்களின் தந்தைக்கு பதக்கம் வழங்கிய ஆட்சியர்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், கொட்டகம்பை கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவர், தனது இரு மகன்களை இராணுவத்திற்கு அனுப்பியமைக்காக, தமிழக அரசின் போர் பணி ஊக்க மானியம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Similar News

News November 5, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.04) இரவு 10 மணி முதல் இன்று (நவ.05) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 4, 2025

புதுக்கோட்டை: வெளுத்து வாங்கப்போகும் மழை!

image

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (நவ.05) மற்றும் நவ.06ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT!

News November 4, 2025

புதுக்கோட்டை: பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in <<>>என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!