News November 28, 2024
ராணுவ கட்டுப்பாட்டுடன் வழி நடத்துகிறார்: R.B.உதயகுமார்

அதிமுகவை ராணுவ கட்டுப்பாட்டுடன் EPS வழி நடத்துவதாக R.B.உதயகுமார் தெரிவித்துள்ளார். ADMK கள ஆய்வுக் கூட்டத்தை கலவர ஆய்வுக் கூட்டம் என உதயநிதி விமர்சித்ததை குறிப்பிட்டு பதிலளித்த அவர், தங்களுக்கு உள்ள செல்வாக்கை பார்த்து பயந்துபோய் உளறுகிறார் என்றார். மேலும், அதிமுகவை கட்டுக்கோப்பாக EPS வழி நடத்துவதை பார்த்து பொறாமைப்படுவதால் தான் இவ்வாறு அவர் பேசிவருவதாகவும் கடுமையாக சாடினார்.
Similar News
News August 20, 2025
திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

மாற்றுக்கட்சியினரை திமுகவில் இணைக்கும் பணி வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், பாஜக முன்னாள் கரூர் தெற்கு மாநகர தலைவர், அதிமுக கரூர் தெற்கு மாநகர ஐடி விங் துணை செயலாளர் உள்ளிட்ட பலர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு திமுக அடையாள அட்டையை வழங்கி, தேர்தல் பணி மற்றும், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை தீவிரப்படுத்த செந்தில் பாலாஜி அறிவுறுத்தினார்.
News August 20, 2025
உடல் எடையை குறைக்க உதவும் நவாசனம்!

✦இது வயிறு, தொடை, இடுப்பு, தோள்பட்டை & கழுத்து தசைகளை வலிமைப்படுத்துகிறது.
➥தரையில் கால்களை நேராக நீட்டி, முதுகை நேராக வைத்து உட்காரவும்.
➥முதுகு நேராக வைத்து, கால்களை மெதுவாக மேலே உயர்த்தி,
கைகளை முன்னோக்கி நீட்டவும்.
➥இந்த நிலையில் 10 வினாடிகள் இருந்து, விட்டு பிறகு பழைய நிலைக்கு திரும்பவும்.
News August 20, 2025
கார்த்தியை அழைத்து பேசிய கமல்? காரணம் என்ன?

‘கூலி’ முடிந்தவுடன் லோகேஷ் கைதி 2 பண்ணுவதாக இருந்தது. ஆனால் தற்போது அவர் ரஜினி, கமல் வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாகவும், அதனை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கமல் தனிப்பட்ட முறையில் கார்த்தியை அழைத்து பேசியிருப்பதாகவும், கார்த்தி சம்மதத்துடனே தற்போது லோகேஷ் ‘கைதி 2’ பணிகளை விட்டுவிட்டு ரஜினி கமல் படத்துக்கான பணிகளை துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


