News April 10, 2025

ராணுவத்தில் வேலை வாய்ப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12ம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் அக்னி வீரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது.

Similar News

News April 18, 2025

திருப்பூர்: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

image

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. RAIL MADDED என்ற அப்ளிகேஷனை இந்த லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்து பயணிகள் பயன்பெறலாம். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும் *SHARE *

News April 18, 2025

திருப்பூர்: கடன் தொல்லையால் தற்கொலை

image

விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி மகன் தங்கராஜ். இவர் கடந்த 8 வருடங்களாக திருப்பூர்,வெள்ளகோவிலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் வீட்டின் அருகில் மளிகை கடையும் நடத்தி வருகிறார். இவர் கடந்த சில தினங்களாக, கடன் தொல்லையால், மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கை விரக்தியடைந்த தங்கராஜ், நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 17, 2025

கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவில் மாவட்ட அளவிலான 21நாட்கள் இருப்பிடமில்லா கோடைக்கால பயிற்சி முகாம்
நடக்கிறது. 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள், வருகிற 24ம் தேதி, மாலை 6 மணி வரை மாவட்ட உள்விளையாட்டு அரங்கத்தில், பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த தகவலை
கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!