News April 16, 2025
ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
Similar News
News April 16, 2025
சிவகங்கை: கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

சிவகங்கை மக்களே கொளுத்தும் கோடை காலத்தில் நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காபி, டீ அடிக்கடி குடிப்பதை குறைத்து கொள்ள வேண்டும். ‘பாஸ்ட் புட்’ உணவுகளை தவிர்க்க வேண்டும். கோதுமை,மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவையெல்லாம் உடல் வெப்பத்தை உண்டாக்கி உடலுக்கு கேடு விளைவிக்கும். *SHARE !!
News April 16, 2025
மாணவர்களுக்கான ஒரு நாள் விஞ்ஞானி நிகழ்ச்சி

காரைக்குடி ‘சிக்ரியில்’ மாணவர்களுக்கான ஒரு நாள் விஞ்ஞானி நிகழ்ச்சி மே 13 முதல் 17 வரை நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ‛https://jigyasa-csir.in/ என்ற இணையதளத்தில் ஏப். 28 முதல் மே 2 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட தேதியில் மட்டுமே காரைக்குடியில் ‘சிக்ரியில்’ பங்கேற்க அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 16, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை

சிவகங்கை மாவட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் 55 மாற்றுத்திறனாளிகள் தம்பதிகளுக்கு ரூபாய் 21 லட்சம் திருமண உதவித்தொகையுடன் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு படிக்காத மாற்றுத்திறனாளி தம்பதிக்கு 8 கிராம் தங்க நாணயமும், திருமண உதவித்தொகையாக 25,000 வழங்கப்படும், தகுதியுடையவர்கள் பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.