News February 1, 2026
ராணிப்பேட்டை: whatsapp-ல் சட்ட ஆலோசனை பெறுவது எப்படி?

ராணிப்பேட்டை மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
Similar News
News February 5, 2026
ராணிப்பேட்டையில் கூண்டோடு கைது!

ராணிப்பேட்டை முத்துகடையில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2-வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. தலைவர் ரவி தலைமையில் நடந்த போராட்டத்தில் மாநில செயலாளர்கள் பங்கேற்று பேசினர். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயன்ற 250-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, மாலை விடுவிக்கப்பட்டனர்.
News February 5, 2026
ராணிப்பேட்டையில் தட்டி தூக்கிய போலீஸ்; 13 பேர் கைது!

தக்கோலத்தில் ஒரு லாட்ஜில் இளைஞர்கள் சிலர் கஞ்சா வைத்திருப்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நடைபெற்ற சோதனையில் 13 பேர் கஞ்சாவுடன் கையும் களமுமாக சிக்கினர். இதில் ராணிப்பேட்டையை சேர்ந்த 9 வாலிபர்கள், திருவள்ளூரை சேர்ந்த 3 பேர் மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த துரோன குப்–பன் (67) ஆகியோரை போலீசார் கைது செய்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
News February 5, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.4) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


