News November 6, 2025
ராணிப்பேட்டை: TNPSC தேர்வர்களுக்கு GOOD NEWS!

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நேற்று (நவ.05) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். TNPSC Group II Mains தேர்வுகள் முந்தைய ஆண்டு வினாக்களின் கைப்பட எழுதிய மாதிரி விடைகள் மெய்நிகர் கற்றல் வலைதளத்தின் வாயிலாக கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்திட தேர்வாளர்கள், ttps://tamilnaducareerservices.tn.gov.in என்ற வலைத்தளத்தில் இப்போதே பதிவு செய்து பயனடையுமாறு, தெரிவித்துள்ளது.
Similar News
News November 6, 2025
ராணிப்பேட்டை பெண்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று (நவ.06) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழக காவல்துறையால் பெண்கள் பாதுகாப்பிற்காகவும், உடனை புகார் அளிக்கவும் உருவாக்கப்பட்ட காவல் உதவி கைபேசி செயலி பதிவிறக்கம் செய்ய குறியீட்டினை ஸ்கேன் செய்யவும் என அறிவுறுத்தப்பட்டது. பின் செயலியை பதிவிறக்கம் செய்து இன்றைய உங்கள் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளுங்கள். என்று மாவட்ட காவல்துறை செய்தியில் வெளியிட்டுள்ளது.
News November 6, 2025
ராணிப்பேட்டை: விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற நவ.7ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் காலை 11 மணிக்கு நடக்கிறது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகிக்கிறார். வேளாண் தோட்டக்கலை, பொதுப்பணித்துறை, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர். விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் இன்று (நவ.06) தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
ராணிப்பேட்டை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

ராணிப்பேட்டை மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!


