News November 23, 2025
ராணிப்பேட்டை: HOUSE OWNER பிரச்சனையா? இத பண்ணுங்க!

வாடகை வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்? வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் கவலைப்படாதீர்கள். உங்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News November 23, 2025
ராணிப்பேட்டை: மோசமான சாலையா? இங்கு புகார் செய்யலாம்

ராணிப்பேட்டை மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<
News November 23, 2025
கலவையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் டிசம்பர் 6ம் தேதி சனிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது சுமார் 10,000 மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் இந்த முகாமை மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்துகிறது. மேலும் விவரங்களுக்கு 94 884 664 68 ல் தொடர்பு கொள்ளலாம்.
News November 23, 2025
ராணிப்பேட்டை: விவசாயி விஷம் அருந்தி தற்கொலை

நெமிலி கீழ் வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு மனைவி, 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். பெருமாள் தனது மகளின் திருமணத்திற்கு நிதி நிறுவனத்தில் 10 லட்சம் கடன் வங்கியிருந்தார், அதை சில மாதங்கள் கட்ட முடியாத நிலையில் நிதி நிறுவனத்திலிருந்து பெருமாள் வீட்டிற்கு வந்து வாக்கு வாதம் செய்துள்ளனர். இதில் மனமுடைந்த பெருமாள் நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.


