News September 4, 2025
ராணிப்பேட்டை: EB துறையில் 1,794 வேலைவாய்ப்பு!

ராணிப்பேட்டை மக்களே தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது ▶️இதற்கு ITI படித்திருந்தால் போதுமானது ▶️சம்பளமாக ரூ.18,800 முதல் 59,900 வரை வழங்கப்படும் ▶️இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
Similar News
News September 4, 2025
காவலர் எழுத்து தேர்விற்கு பயிற்சி வகுப்பு தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 2ம் நிலை காவலர் பணியிட எழுத்துத் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. எனவே இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்
https://forms.gle/DV9npFmjGcFgBexG7 என்ற Google link மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து வகுப்பில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல்.
News September 4, 2025
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ஜெ.யு. சந்திரகலா, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், செப்டம்பர் 8 அன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரதமர் தேசிய தொழிற்பயிற்சி மேளா நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த மேளா மூலம், பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் (NAC) வழங்கப்படும். தகுதியான நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News September 4, 2025
முதியவரை SI தள்ளிவிட்ட விவகாரம்: காவல்துறை விளக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் சாத்தூரில் நடந்த `உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில், எஸ்.ஐ. பிரபாகரன் முதியவர் ஒருவரை தள்ளியது குறித்து, மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வெங்கடாபதி என்ற முதியவர் அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், கிராம நிர்வாக அலுவலரை தாக்கியதாகவும், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவரை கட்டுப்படுத்த குறைந்தபட்ச பலத்தைப் பயன்படுத்தி எஸ்.ஐ. அமைதிப்படுத்தியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.