News November 28, 2025

ராணிப்பேட்டை: AIRPORT-ல் வேலை! APPLY NOW

image

ராணிப்பேட்டை மக்களே தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள் <>இங்கு<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

Similar News

News November 28, 2025

ஆரஞ்சு அலர்ட் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

டிட்வா புயல் காரணமாக நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது .இந்த நாட்களில் அதீத கன மழைக்கான வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் ஏரி குளம் குட்டை ஆற்றுப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் . பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று (நவ.28)ஆம் தேதி தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

ராணிப்பேட்டையில் ரெட் அலர்ட்; ஆட்சியர் அவசர கூட்டம்

image

(நவ.28) ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிபலத்த மழைக்கான ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மீட்பு அணிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டு, தாழ்வான பகுதிகள் கண்காணிப்பு, தேவையானால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டன. மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது

News November 28, 2025

எஸ் ஐ ஆர் கணக்கிட்டு படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி!

image

இன்று ராணிப்பேட்டை மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய செய்தி வெளியிட்டுள்ளார். அதில் வாக்காளர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் வாக்காளர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைத்து உங்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியல் 2026-ல் இடம் பெறுவதை உறுதி செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார் என்று செய்தியை வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!