News May 8, 2025

ராணிப்பேட்டை +2 மாணவர்கள் கவனத்திற்கு

image

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு கிளிக் https://www.tngasa.in/ செய்து விண்ணப்பிக்கலாம். கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2. மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க

Similar News

News March 9, 2026

ராணிப்பேட்டையில் இன்று அனல் பறக்கும்!

image

தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், இன்று(மார்ச்.09) ராணிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் அதிக வெப்பமும், ஈரப்பதமும் நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்களிடையே உடல்நல அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பொதுமக்கள் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

News March 9, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.8) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 8, 2026

ராணிப்பேட்டை: ரேஷன் கார்டு இருக்கா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

ராணிப்பேட்டை மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!