News March 26, 2024
ராணிப்பேட்டை: 2 பேருக்கு வெட்டு

பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் இன்று அரக்கோணம் வந்து கொண்டிருந்தது. அப்போது, பொதுப் பெட்டியில் சீட் பிடிக்கும் தகராறில் மும்பையை சேர்ந்த 3 பெண்கள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சேகர் மற்றும் ஒரு வாலிபரை பிளேடு மற்றும் நகங்களால் கிழித்துள்ளனர். இதில் ரத்த காயம் அடைந்த இருவர் அரக்கோணம் ரயில்வே போலீசில் புகார் கொடுத்தனர் மூன்று பெண்களிடம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 16, 2026
ராணிப்பேட்டை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், மாவட்ட நிர்வாகத்திடமும் (04172271000), லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News February 16, 2026
ராணிப்பேட்டை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

ராணிப்பேட்டை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News February 16, 2026
ராணிப்பேட்டை: ஹோட்டல் தொடங்க ரூ.50,000!

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்.


