News March 26, 2024

ராணிப்பேட்டை: 12,038 விளம்பரங்கள் அகற்றம்

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதையடுத்து ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி, பொது மற்றும் தனியார் இடங்களில் வைக்கப்பட்டிருந்த 12,038 சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் வளர்மதி நேற்று(மார்ச் 26) தெரிவித்துள்ளார்.

Similar News

News April 3, 2025

ராணிப்பேட்டை: ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 11 ஆண்கள் & 1 பெண் என மொத்தம் 12 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவற்றிற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட தளபதி ஊர்க்காவல்படை ராணிப்பேட்டை மாவட்ட அலுவகத்தில் நேரடியாக இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். 07.04.2025 முதல் 09.04.2025 வரை 3 நாட்கள் மட்டுமே விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். *நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க. நண்பர்களுக்கும் பகிரவும்*

News April 3, 2025

ராணிப்பேட்டை: அமைச்சர் வெளியிட்ட சூப்பர் திட்டம்

image

விவசாயத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் நேற்று அறிக்கை விடுத்துள்ளார். அதில், “ராணிப்பேட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வேளாண்மை உழவர் நலத்துறையின் அனைத்து திட்டங்களையும் ஆலோசனைகளையும் இடுப்பொருட்களையும் ஒரே இடத்தில் பெற்று பயனடைய ஏதுவாக ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் 25 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

News April 3, 2025

இழந்த கௌரவத்தை திரும்ப பெற சோளிங்கர் செல்லுங்கள்

image

சோளிங்கர் மலையின் மீது அமைந்துள்ள கோவிலில் பெருமாள் யோக நரசிம்மர் வடிவில் உள்ளார். இங்குள்ள யோக நரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் தரிசித்து விட்டால் இது வரை இருந்த தடைகள் இல்லாமல் போகும், இழந்த பொருளை, பிரிந்த உறவை, பதவியை, கௌரவத்தை திரும்ப பெறுவது உறுதி என்பது ஐதீகம். மேலும், இந்த மலை மீது 24 நிமிடங்கள் இருந்தாலே ஒருவர் முக்தி அடைவார் என்பதும் நம்பிக்கை. *நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்*

error: Content is protected !!