News December 7, 2025

ராணிப்பேட்டை: ஹோட்டலில் தரமற்ற உணவா? தயங்காம சொல்லுங்க!

image

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீபத்தில் சென்னை உணவகத்தில் தேரை, திருவள்ளூர் உணவகத்தில் எலி, கிருஷ்ணகிரி உணவில் பாம்பு என குற்றசாட்டு எழுந்தது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். ஷேர்!

Similar News

News December 8, 2025

ராணிப்பேட்டை: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

image

ராணிப்பேட்டை மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து, வரும் டிச.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு ரூ.35,400 சம்பளமாக வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 8, 2025

ராணிப்பேட்டை: இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை!

image

ராணிப்பேட்டை மாவட்டம், பாரதி நகரில் திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திமுக அமைச்சர் காந்தி தலைமையில் இன்று (டிசம்பர்8)ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் காந்தி பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார். இதில், மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து ஒன்றிய செயலாளர்கள், நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News December 8, 2025

மாற்றுத்திறனாளிகளை தேடி சென்ற கலெக்டர்!

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.8)ம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. குறைதீர் கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்க வந்திருந்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மாற்றுத்திறனாளிகள் உட்கார்ந்து இடத்திற்கு சென்று அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

error: Content is protected !!