News November 7, 2025

ராணிப்பேட்டை: வைரஸ் காய்ச்சலா? இத பண்ணுங்க!

image

ராணிப்பேட்டை மக்களே.., வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். இதை உடனே SHARE பண்ணுங்க!

Similar News

News February 5, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்- 2, 2ஏ தேர்வு வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் பெண்கள் கலை கல்லூரியில் 8-ந் தேதி நடை பெறவுள்ளது. தேர்வுக்கான நுழைவுச்சீட்டு <>www.tnpsc.gov.in<<>> என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வுக்கூடதிற்கு காலை 8.30 மணி முதல் 9 மணி வரை மற்றும் பிற்பகல் 1.30 மணி முதல் 2 மணிக்குள் வருகை புரிய வேண்டும் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News February 5, 2026

ராணிப்பேட்டையில் கூண்டோடு கைது!

image

ராணிப்பேட்டை முத்துகடையில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2-வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. தலைவர் ரவி தலைமையில் நடந்த போராட்டத்தில் மாநில செயலாளர்கள் பங்கேற்று பேசினர். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயன்ற 250-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, மாலை விடுவிக்கப்பட்டனர்.

News February 5, 2026

ராணிப்பேட்டையில் தட்டி தூக்கிய போலீஸ்; 13 பேர் கைது!

image

தக்கோலத்தில் ஒரு லாட்ஜில் இளைஞர்கள் சிலர் கஞ்சா வைத்திருப்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நடைபெற்ற சோதனையில் 13 பேர் கஞ்சாவுடன் கையும் களமுமாக சிக்கினர். இதில் ராணிப்பேட்டையை சேர்ந்த 9 வாலிபர்கள், திருவள்ளூரை சேர்ந்த 3 பேர் மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த துரோன குப்–பன் (67) ஆகியோரை போலீசார் கைது செய்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!