News October 17, 2025
ராணிப்பேட்டை: வேன்-பள்ளி பேருந்து மோதி விபத்து!

மேலேரி ஊராட்சிக்குட்பட்ட அரசங்குப்பத்தில் நேற்று (அக்.16) தனியார் பள்ளி பேருந்தும் எதிரே வந்த மினி வேனும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி வாகனத்தில் இருந்த மாணவ மாணவிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பேருந்து டிரைவருக்கு சிறிது காயம் ஏற்பட்டு, அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெமிலி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 8, 2025
ராணிப்பேட்டை:ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய தகவல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று (நவம்பர் 8) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற பல்வேறு சேவைகளை இந்த குறைதீர் கூட்டத்தில் விண்ணப்பம் அளித்து பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
News November 8, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (நவ-07) இரவு 10 மணி முதல் இன்று
(நவ.8) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
ராணிப்பேட்டை மக்களுக்கு விழிப்புணர்வு செய்தி

இன்று (நவ.7) ராணிப்பேட்டை காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் whatsapp அல்லது பிற செய்திடல் பயன்பாடுகள் மூலம் அனுப்பப்படும் ஆப் கோப்புகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடிய தீங்கு விளைவிக்கும் தீப்பொருள் இருக்கலாம் என விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது. அவசரத்துக்கு/ உதவிக்கு அழைக்கவும்:1930 என தெரிவிக்கப்பட்டுள்ளது


