News December 21, 2025
ராணிப்பேட்டை: வீட்டில் பதுக்கி மது விற்றவர் கைது!

அரக்கோணம் அடுத்த பருத்திப்புத்தூர் பகுதியில் தாலுகா போலீசார் நடத்திய ரோந்து பணியின் போது, சட்டவிரோதமாக மது விற்ற செல்வராஜ் (49) என்பவரைக் கைது செய்தனர். டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி, வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது விசாரணையில் தெரியவந்தது. அவரிடமிருந்து 95 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 22, 2025
ராணிப்பேட்டை: SBI வங்கியில் வேலை.. நாளையே கடைசி!

ராணிப்பேட்டை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த லிங்கை <
News December 22, 2025
ராணிப்பேட்டை பெயர்க்காரணம் தெரியுமா உங்களுக்கு?

செஞ்சியை சேர்ந்த ராஜா தேசிங் (22) என்ற மன்னர் ஆற்காடு நவாப் சததுல்லா கானிடம் போரில் கொல்லப்பட்டார். ராஜா தேசிங்கின் மனைவியும் சதி முறையில் உயிர் துறந்தார். ராஜா தேசிங் மற்றும் அந்த இளம் பெண்ணின் வீரத்தை போற்றும் வகையில் நவாப் ஆற்காட்டுக்கு அருகில் பாலார் ஆற்றின் வடக்குக் கரையில் ஒரு கிராமத்தைக் கட்டினார். அந்த நகரத்திற்கு ராணிப்பேட்டை என்று பெயரிட்டார். தெரியாத உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 22, 2025
ராணிப்பேட்டை: வாக்காளர்களே சூப்பர் UPDATE!

ராணிப்பேட்டை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!


