News April 24, 2025
ராணிப்பேட்டை: வீடு கட்ட தடையா இங்கு போங்க

ராணிப்பேட்டை வாலாஜாபேட்டை அருகேயுள்ள வன்னிவேடு அகத்தீசுவரர் கோயிலில் உள்ள மூலவரை அகத்திய முனிவர் மணலால் அமைத்து வழிபட்டார், வன்னி மரங்கள் அதிகம் உள்ளதால் இத்தலத்துக்கு வன்னிக்காடு என்ற பெயரும் உண்டு. இந்த கோயிலின் பூஜையில் கலந்து கொண்டால் வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் தடங்கலின்றிக் கட்டி முடிப்பார்கள் என்கிற நம்பிக்கையுண்டு, வீடு கட்டும் பணி தடைபடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 1, 2025
ராணிப்பேட்டையில் மராத்தான் போட்டி!

வாலாஜாவில் இன்று (நவ.1) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராணிப்பேட்டை மாவட்ட பிரிவு சார்பாக ஃபிட் இந்தியா ஃபிரீடம் ரன் மினி மரத்தான் 6.0 அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் தனியார் பயிற்சி மையம் மாணவர்கள் மற்றும் கேலோ இந்தியா பயிற்சி மையம் மாணவர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன் கலந்து கொண்டார்.
News November 1, 2025
ராணிப்பேட்டையில் ‘தாயுமானவர் திட்டம்’ – ஆட்சியர் அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள் உள்ள 36,810 குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கும், தாயுமானவர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் எடுத்து சென்று வழங்கப்படுகிறது. அதன்படி இந்த மாதத்தில் வருகிற 3,4-ந் தேதிகளில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது என ஆட்சியார் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
News November 1, 2025
ராணிப்பேட்டையில் தேசிய ஒருமைப்பாடு நிகழ்ச்சி

சர்தார் வல்லபாய் பட்டேல் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன்ஜமால் உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (அக்.31) மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஒற்றுமை தேசிய ஒருமைப்பாடு தன்னார்வ குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


