News August 21, 2025
ராணிப்பேட்டை: விஏஓ, தாசில்தார் லஞ்சம் கேட்டால்? CALL பண்ணுங்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள VAO, தாசில்தார் மற்றும் அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். புகார்களை dsprptdvac.tnpol@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04172-299200 எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க.
Similar News
News November 11, 2025
ராணிப்பேட்டை: BE படித்தால் சூப்பர் வேலை!

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாளிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்( இஸ்ரோ ) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆவது முதல் BE படித்தவர்கள் வரை யாரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நவ.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 11, 2025
ராணிப்பேட்டை: சாலை விபத்தில் விஏஓ பலி!

ராணிப்பேட்டை: சக்கரமல்லூர் கிராம நிர்வாக அலுவலராக முத்துக்குமார்(42) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பைக்கில் செல்லும் போது ஸ்பீட் பிரேக்கரில் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று(நவ.11)அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் வருவாய்த்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 11, 2025
ராணிப்பேட்டை: வேலூர் இப்ராஹிமிற்கு கொலை மிரட்டல்!

ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி பாஜக பொறுப்பாளரும் தேசிய செயலாளருமான வேலூர் இப்ராஹிமுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக சிப்காட் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று(நவ.10) நள்ளிரவில் வேலூர் இப்ராஹிம் புகார் கொடுத்தார் .தொகுதியை விட்டு வெளியேறா விட்டால் கொலை செய்து விடுவோம் என்று போனில் மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். இந்நிகழ்வில், அவருடன் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


