News January 9, 2026
ராணிப்பேட்டை வாக்காளர்கள் கவனத்திற்கு…

ராணிப்பேட்டை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 23, 2026
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோக சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோக சிறப்பு முகாம் நாளை ஜன- 24 காலை 10 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.குடும்ப அட்டைதாரர்கள் பெயர் திருத்தம் பெயர் சேர்த்தல், புதிய அட்டை கோருதல்,முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட முகாமில் திருத்த பணிகள் நடைபெறுகிறது.இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
News January 23, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கியாஸ் சிலிண்டர் நுகர்வோர்கள் மற்றும் வினியோகிக்கும் முகவர்கள் குறைதீர்வு கூட்டம் வருகிற ஜனவரி 30-ந் தேதி மாலை 3 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் குறைபாடுகள், தேவைகள் குறித்து ஆலோசித்து குறைகள் களைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, எரிவாயு நுகர்வோர்கள் கலந்து பயன் பெறலாம். என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்
News January 23, 2026
டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையை ஆட்சியர் ஆய்வு!

பனப்பாக்கம் சிப்காட்டில் ரூபாய் 9,000 கோடி முதலீட்டில் 470 ஏக்கரில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு பிப்ரவரி 2வது வாரத்தில் உற்பத்தி தொடங்க உள்ளது.இது தொடர்பாக இன்று ஜன.23ம் தேதி ஆட்சியர் சந்திரகலா நேரில் ஆய்வு செய்தார். டாடா மோட்டார்ஸ் அதிகாரிகள் ஆனந்த செல்வன் ,முத்துக்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் உடன் இருந்தனர்.


