News December 19, 2025

ராணிப்பேட்டை: வாகனம் மோதி வாலிபர் பலி

image

ஜோதிமோட்டூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், திருத்தணியைச் சேர்ந்த மதன் (30) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். பாராஞ்சி சாலையில் சென்றபோது இந்த விபத்து நேரிட்டது. தகவலறிந்து வந்த சோளிங்கர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனத்தைக் கண்டறிய, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்கின்றனர்.

Similar News

News December 23, 2025

ராணிப்பேட்டை மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

News December 23, 2025

ராணிப்பேட்டை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News December 23, 2025

ராணிப்பேட்டையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் உள்ள அதிமுக மேற்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில், ராணிப்பேட்டை நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (டிச.22) நடைபெற்றது. செயலாளர் கே.பி.சந்தோஷம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

error: Content is protected !!