News September 13, 2025
ராணிப்பேட்டை: ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ரேஷன் கார்டுகளில் திருத்தங்கள் செய்ய இன்று (செப்.13) ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்யப்படும். இதில், மக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News September 13, 2025
ராணிப்பேட்டை: டிகிரி இருந்தால் ரிசர்வ் வங்கியில் வேலை!

ராணிப்பேட்டை மக்களே, ரிசர்வ் வங்கியில் கிரேட்-பி பிரிவில் 83 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இதற்கு சம்பளமாக ரூ.55,200 – ரூ.99750 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 21-30. விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 30க்குள் இந்த <
News September 13, 2025
ராணிப்பேட்டை: கேஸ் சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு…

ராணிப்பேட்டை மக்களே, நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் டெலிவரி ஆக தாமதம் ஆகுதா? இனி கவலை வேண்டாம். நாம் கேஸ் சிலிண்டர் புக் செய்தால், அடுத்த 48 மணிநேரத்திற்குள் டெலிவரி செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், பலர் ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குப் பிறகு கூட அதைப் பெறுகிறார்கள். அவசர காலத்தில் இப்படி இழுத்தடித்தால் இந்த நம்பரில் (1906, 1800-2333-555) புகார் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!
News September 13, 2025
ராணிப்பேட்டை: பொருளை மாற்ற மறுத்தால் புகார் அளிக்கலாம்

கடைகளில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்ற மறுத்தாலோ அல்லது பணத்தைத் திரும்பத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற (அ) பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. ராணிப்பேட்டை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடமும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் புகார் அளிக்கலாம். SHARE IT!