News February 12, 2026

ராணிப்பேட்டை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) ராணிப்பேட்டை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

Similar News

News February 16, 2026

ராணிப்பேட்டை: கவனிக்காத மகன்கள்.. தாய் தற்கொலை!

image

கணபதிபுரம் பெரிய தெருவை சேர்ந்தவர் பொன்னம்மாள்(80). உடல் நல குறைவால் இருந்த அவரை மகன்கள் சரிவர கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் நேற்று (பிப்.15) பொன்னம்மாள் அவரது நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தக்கோலம் போலீசார் உடலை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தற்கொலை குறித்து தக்கோலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 16, 2026

ராணிப்பேட்டையில் இளைஞர் துடிதுடித்து பலி

image

வேடல் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (45). இவர் நேற்று (பிப்.15) காந்திநகர் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது மரக்கட்டைகள் ஏற்றி சென்ற வேனின் பின்பக்கமாக பைக் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஏழு மலையை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதித்து வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

News February 16, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்-15) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!