News October 2, 2025

ராணிப்பேட்டை: ரயில்வேயில் ரூ.45,000 சம்பளத்தில் வேலை!

image

இந்திய ரயில்வேயில் Section Controller பதவிக்கு 368 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 21 ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் மூலம் மாநில வாரியாக நிரப்படவுள்ளது.இந்த பணிக்கு 20வயதுக்கு மேல் இருந்து, எதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,400, மற்றும் மொத்தமாக மாதம் ரூ.45,000 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர் அக்டோபர்-14 க்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர்

Similar News

News November 9, 2025

ராணிப்பேட்டை: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் <<>>செய்து நவ.26ம் தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளவும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 9, 2025

ராணிப்பேட்டை: பொதுமக்களுக்கு GOOD NEWS!

image

ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில், கடந்த சில மாதங்களாக அந்த இடத்தில் கால அட்டவணை பலகை இல்லாமல் இருந்தது. இதனால் பஸ்கள் வந்து செல்லும் நேரம் தெரியாமல் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் (நவ.7) பஸ் வந்து செல்லும் நேரம் குறித்த அறிவிப்பு பலகையை அமைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

News November 9, 2025

ராணிப்பேட்டை: அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்.!

image

ராணிப்பேட்டை, ரெட்டிவலம் அருகே நேற்று முன்தினம் (நவ. 7) அரக்கோணம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து பைக் மீது மோதியதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து பேருந்தை சிறைப்பிடித்து, கண்டக்டர் மற்றும் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், பேருந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!