News December 11, 2025

ராணிப்பேட்டை: முதியவர் நீரில் மூழ்கி பலி!

image

மேல்பள்ளேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(83). வள்ளிமலையில் மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு கோட்டநத்தம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, பொன்னையாற்றை கடக்க முயன்றார். அப்போது, ஆற்றின் ஆழம் தெரியாமல் காலை விட்டதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

Similar News

News December 14, 2025

ராணிப்பேட்டை: மத்திய அரசு வேலை..ரூ.1,12,400 வரை சம்பளம்!

image

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஆர்டிஓ-வில் 764 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதி ஐடிஐ, டிப்ளமோ, பிஎஸ்சி, இன்ஜினியர் முடித்திருந்தால் போதும், ரூ.19,900 முதல் ரூ.1,12,400 வரை சம்பளமாக வழங்கப்படும். 18-28 வயதுடையவர்கள் (ம) மாற்றுத்திறனாளிகளுக்கு 38 வயது வரை விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் ஜன.01 உடனடியாக இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

News December 14, 2025

ராணிப்பேட்டை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

ராணிப்பேட்டை மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)

News December 14, 2025

ராணிப்பேட்டை: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.

error: Content is protected !!