News March 13, 2025
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக சமூக வலைதளத்தில் இன்று (மார்ச் 13) வெளியிட்டுள்ள செய்தியில் போலியான வங்கி செய்திகளைக் குறித்து ஜாக்கிரதையாக இருங்கள், உங்கள் வங்கிக் கணக்குகளை யாரிடமும் பகிர வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உதவிக்கு சைபர் கிரைம் 1930 அழைக்கவும்.
Similar News
News August 28, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணி விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் பற்றிய விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்குட்பட்ட காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளன. அவசரநிலைகளில் பொதுமக்கள் இந்த எண்ணங்களை பயன்படுத்தி உடனடி உதவி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 27, 2025
ராணிப்பேட்டை: அமெரிக்கா விதித்த வரியால் வேலை இழப்பு

அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பல தோல் தொழற்சாலைகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மேல்விஷாரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தோல் தொழிற்சாலைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.100 கோடி ஏற்றுமதி பாதிக்கும் என கூறப்படும் நிலையில் லட்சக்கணக்கானோர் வேலை இழப்பார்கள் என தொழிற்துறை வல்லுனர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். உங்க கருத்தை பதிவு செய்து ஷேர் பண்ணுங்க
News August 27, 2025
BREAKING: ராணிப்பேட்டை – 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே இன்று (ஆக.27) 14 வயது சிறுவன் நீரில் முழ்கி உயிரிழந்த சம்பம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் விவசாய கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 10ஆம் வகுப்பு மாணவன் ராஜேஷ் என்பவர் பரிதாமபாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.