News March 1, 2025

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தகவல்

image

சமூக வளைதளங்களில் மோசடிகளை தவிர்ப்பதற்கான சில குறிப்புகளை ராணிப்பேட்டை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு கணக்கிற்கும் தனிப்பட்ட கடவுச்சொல்லை பயன்படுத்தவும். எந்தவொரு online விண்ணப்பத்திலும் Debit/credit கார்டு விபரங்களை பகிற வேண்டாம். அதிக லாபம், பணம் இரட்டிப்பு என்ற ஆசை வார்த்தைகளை நம்பி Online-ல் பணம் செலுத்த வேண்டாம். விவரங்களை அறியாமல் லிங்கை ஷேர் செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளது.

Similar News

News April 21, 2025

கொளுத்தும் வெயில் தப்பிக்க எளிய டிப்ஸ்

image

ராணிப்பேட்டையில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS,எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

image

அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் – நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். இன்றே (ஏப்.21) கடைசி தேதி என்பதால் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் சிறுமி பலி

image

ராணிப்பேட்டை வாணிச்சத்திரம் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி திடீரென நின்றது. இதனால், லாரிக்கு பின்னால் வந்த ஆட்டோ, மற்றொரு லாரி, மற்றும் கார் ஆகியவை அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளனாது. இந்த சம்பவத்தில், ஆட்டோவில் குடும்பத்துடன் வந்த கார்த்திக் என்பவரின் 9 வயது மகள் நிஜிதா உயிரிழந்தார். மேலும், விபத்தில் சிக்கி காயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

error: Content is protected !!