News November 13, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிஜிட்டல் பயிர் சர்வே பணி

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் அரக்கோணம் மற்றும் கலவை பகுதிகளில் உள்ள தனியார் வேளாண் கல்லூரி மாணவர்கள் 526 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத் தில் 326 வருவாய் கிராமங்களில் 9,53,550 சர்வே எண்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதுவரை 2,64,879 சர்வே எண்கள் பயிர் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் வரும் 22ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 12, 2025

அரக்கோணத்தில் போலி சான்றிதழ்!

image

ராணிப்பேட்டை: அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வாகும் ஆண், பெண் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வான சர்ஜீத்(23) என்பவரய்து சான்றிதழ்களில் இருப்பிட சான்றிதழ் போலி என்பது தெரியவந்தது. இதுகுறித்து தக்கோலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News November 12, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 12, 2025

ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பூர்த்தி செய்யப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் 2026 கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களிடமிருந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் பெறப்படும் போது கைபேசியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் செயலியில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று (நவ.11) நடத்தப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டது.

error: Content is protected !!