News August 17, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

Similar News

News September 11, 2025

ராணிப்பேட்டை: மாதம் ரூ.1000 பெற, இந்த 5 ஆவணங்கள் போதும்!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <>லிங்கில் கிளிக்<<>> செய்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

News September 11, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (செப்-12) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை டேக் ஹோண்டா கிளப் TNHB அரக்கோணம், வன்னியர் திருமண மண்டபம் தென் வன்னியர் தெரு சோளிங்கர், ராகவேந்திரா மஹால் அவளூர், செயின்ட் ஜான் பள்ளி தென்றல் நகர் சீகராஜபுரம் ஆகிய பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.பொதுமக்கள் மகளிர் உரிமை தொகை, புதிய குடிநீர் இணைப்பு விண்ணப்பித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மனு அளிக்கலாம்.

News September 11, 2025

சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசிய நபர் கைது

image

வாலாஜா சார்ந்த புகைப்படக் கலைஞர் கிருஷ்ணன், தனது சமூக வலைத்தளத்தில் இரு மதத்திற்கு இடையே பிரிவினையை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார். இதைதொடர்ந்து, ராணிப்பேட்டை, மேல்விஷாரம் மற்றும் வாலாஜாவைச் சேர்ந்த தமுமுக, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, மஜக உள்ளிட்ட நிர்வாகிகள் வாலாஜா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், காவல்துறையினர் கிருஷ்ணனை கைது செய்தனர்.

error: Content is protected !!