News August 31, 2024
ராணிப்பேட்டை மாற்றுத்திறனாளி மாணவன் தட்டச்சு தேர்வில் கலக்கல்

தமிழ்நாடு அளவிலான தட்டச்சு தேர்வு இன்று 31.8.24 நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை சார்ந்த ஜிப்ரான் 12ஆம் வகுப்பு படிக்கும் போது மின்விபத்தில் அவருடைய வலது கையை முற்றிலும் இழந்துவிட்டார். இருந்தபோதிலும் அவர் மனம் தளராமல் தனது இடது கையால் மட்டும் இன்று நடைபெற்ற லோயர் கிரேட் டைப் ரைட்டிங்கில் வேகமாக தட்டச்சு செய்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
Similar News
News September 10, 2025
ராணிப்பேட்டை ஹோட்டல் சங்க மண்டல மாநாடு

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அன்பு மகாலில் இன்று தமிழ்நாடு ஹோட்டல் சங்கம், ராணிப்பேட்டை மாவட்ட ஹோட்டல் சங்கம் சார்பில் வேலூர் மண்டல மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஹோட்டல் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
News September 9, 2025
கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் 2ம் நிலை காவலர் காலி பணியிட எழுத்துத் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் இன்று(09.09.2025) காலை 10:30 மணிக்கு தொடங்கப்பட்டது. சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்
News September 9, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( செப் -09) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100